சென்னை, ஜூலை 18: மெட்ரோ ரெயில் 2-வது திட்டத்தின் கீழ் இதுவரை 2200 இடங்களில் மண் பரிசோதனை முடிவடைந்துள்ளது. இதில் பெரும்பாலானவற்றில் கடின பாறைகள் இருப்பது தெரியவந்திருப்ப தால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் சற்று தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ 2-வது திட்டத்தின் கீழ் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரையிலான வழித்தடத்தில் 35 கி.மீ. தொலைவுக்கும் மற்றும் மாதவரம் முதல் சிஎம்பிடி வரையிலான வழித்தடத்திலும் மொத்தம் 1960 இடங் களில் மண் பரிசோதனை நிறைவடைந் துள்ளது.

இது தவிர சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை 10.8 கி.மீ. தொலைவுக்கு 250 இடங்களில் நடைபெற்று வரும் மண் பரிசோதனை செப்டம்பர் மாதத்தில் நிறைவடைவதாக உள்ளது.
இதேபோல் கலங்கரை விளக்கம் முதல் மீனாட்சி கல்லூரி வரையிலான 8 கி.மீ. தொலைவில் 320 இடங்களில் நடைபெற்று வரும் மண் பரிசோதனை 50 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

மீனாட்சி கல்லூரி முதல் போரூர் வரை 500 இடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த பரிசோதனைகளின் போது வட சென்னை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 20 மீட்டர் ஆழத்திலும், ஓஎம்ஆரில் சுமார் 10 மீட்டர் ஆழத்தி லும் கடினமான பாறைகள் இருப்பது தெரியவந்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சில இடங்களில் பாறையும், களிமண்ணும் சேர்ந்து இருப்பதால் கட்டு மானப்பணியில் சிக்கல் ஏற்படும் என்றும், பாறை மட்டுமே இருந்தால் உடைப்பதில் பிரச்சினை எதுவும் இருக்காது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுவரை 2200 இடங்களில் மண் பரிசோதனை முடிவடைந்துவிட்டதாக வும், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் இந்தப்பணி 100 சதவீதம் பூர்த்தியாகிவிடும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறி யுள்ளனர்.

2020 தொடக்கத்தில் கட்டுமானப்பணி தொடங்கிவிடும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் மாதவரம் முதல் பெரம்பூர் வரையிலான பாதையில் பெரும்பாலான இடங்களில் களிமண்ணும், தரமணி- சோழிங்கநல்லூர் வரையிலான பாதை யில் பெரும்பாலானவற்றில் 20 மீட்டர் ஆழத்தில் பாறைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ந்தது