மும்பை, ஜூலை 18:  எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்படுவார் என்றும் இதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா ஏ அணியில் கலக்கிவரும் ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகியவர்களில் பெரும்பாலானோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். குறிப்பாக, மயன்க் மார்கண்டே, க்ருனால் பாண்ட்யா, கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஆவேஷ் கான் ஆகியோருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படலாம். மாயன்க் அகர்வால், ரிஷப் பன்ட் ஆகியோர் வெ.இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பர் என்றே தெரிகிறது. மாற்று விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது.

இவ்வாறு அமையும் பட்சத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான இளம் இந்திய படை தயாராக வாய்ப்புள்ளது. இந்த நிலையில், எனக்கு ஓய்வு தேவையில்லை என்றும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறேன் என்றும் தேர்வுக்குழுவிடம் விராட் கோலி கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஒருவேளை ரோஹித்திடம் கேப்டன் பதவியை கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் தொடர் காரணமாகி விடக்கூடாது என்பதற்காக விராட் கோலி உஷாராகி விட்டாரோ? என்னவோ?