சென்னை, ஜூலை 18: மத்திய அரசின் ஏதேச்சாதிகாரத்தை நிலைநாட்ட ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் நியமன உறுப்பினர்களைக் கொண்ட நான்கு வாரியங்கள் செயல்படும்.

இந்திய மருத்துவக் கவுன்சிலைச் சீரமைத்து, சீரிய முறையில் இயங்கிட முயற்சிக்காமல், அதனை ஒரேயடியாக ஒழித்துவிட்டு, மத்திய அரசின் ஏதேச்சாதிகாரத்தை நிலைநாட்ட ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைக்கும் முடிவு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது.

மருத்துவப் படிப்புகளை முழுதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும், “நெக்ஸ்ட்’ எனப்படும் “தேசிய வெளியேறும் தேர்வை’ கட்டாயமாக்கவும் வழிவகை செய்யும் “தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.