சென்னை, ஜூலை 18: குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்துவரும் 2 தினங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிகடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 4 செ.மீ, திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 செ.மீ, வல்லம், மதுக்கூரில் தலா 2 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.