காஞ்சிபுரம், ஜூலை 18: 18-ம் நாளான இன்று ஆதி அத்திவரதருக்கு கத்தரிப்பூ கலர் பட்டாடை அணிவிக்கப்பட்டுள்ளதுடன் பெருமாளுக்கு பிடித்த செண்பகப்பூவால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலை பெருமாளின் கிரீடம் முதல் பாதம் வரை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வழக்கத்தைபோல் இன்றும் கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். காஞ்சியில் 18ம் நாளான இன்று ஆதி அத்திவரதருக்கு கத்தரிப்பூ கலர் பட்டு அணிவிக்கப் பட்டுள்ளதுடன், பெருமாளுக்கு பிடித்த செண்பக பூவால் தொடக்கப்பட்ட நீண்ட மாலை பெருமாளின் கிரிடம் முதல் பாதவரை அணிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடல் முழுவதும் மல்லி, முல்லை, தவனம், சிகப்பு ரோஜாக்கள் என பல வண்ண மலர்கள் கலந்து பூக்களால் மாலைகளும் அத்திவரதரின் கழுத்தை அலங்கரிக்கின்றன. காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் இசைக்க நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.

இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட வரிசையில் வரும் பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… நாராயணா என பக்தி கோஷத்துடன் பெருமாளை தரிசித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் – வாலாஜா சாலை ஓரத்திலும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகளும், செல்லும் பேருந்துகளும் இயங்க முடியாமல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இன்று இரண்டு லட்சம் பேர் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 17 நாட்களில் 22லட்சம் பக்தர் தரிசனம் செய்துள்ளனர்.