தரமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தி இயக்குநர் மற்றும் நடிகர்களான பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்‘பொன்மகள் வந்தாள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே ஜே ப்ரட்ரிக் எழுதி இயக்குகிறார். தன் கேமராக் கண்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

96 பட புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். ரூபன் படத் தொகுப்பு மேற்கொள்ள அமரன் கலையமைக்கிறார்.  சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பூஜையில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, கே.இ.ஞானவேல்ராஜா, ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.