துருவா, இந்துஜா நடித்துள்ள சூப்பர் டூப்பர்

சினிமா

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் ஏகே , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா , படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ஏகே பேசுகையில், இந்த படம் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். முந்தைய படங்களில் பார்க்காத துருவை இதில் பார்க்கலாம். அதேபோல் இந்துஜா கிளாமர், கேரக்டர் என இரண்டிலும் அசத்தி உள்ளார். ஷாராவின் நகைச்சுவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது என்றார்.