அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’, இப்படம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்‘ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தினை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். யுவன்சங்கர் ராஜா இசை அமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இதில் அஜித் வழக்கறிஞராகவும், அவருக்கு ஜோடியாக வித்யா பாலனும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், ª ட ல்லி க ணேஷ், ர ங் க ர £ ஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 8 -ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தை தணிக்கை குழுவிற்கு திரையிட்டனர். படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்று வழங்கி உள்ளனர்.