சென்னை, ஜூலை 18: ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ / மாணவியரிடையே திருக்குறள் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியினை நடத்த இருக்கிறது.

இப்போட்டிகள், 10 மையங்களில் நடத்தப்படும். சென்னையில், ஜூலை 27 அன்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

சென்னை தவிர புதுச்சேரி, மதுரை, நெல்லை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களிலும் முறையே வரும் ஜூலை 28 மற்றும் ஆகஸ்ட் 3, 4, 10, 11, 17, 18, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இதில் பங்கு பெற விரும்புவோர் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளிளோ அல்லது ஸ்ரீராம் சிட்ஸ், எண்: 145, சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை – 600 004. தொலைபேசி: 044 – 4021 4100 என்ற முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம்.