கேபிசி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்விழா

சென்னை

செங்குகன்றம், ஜூலை18: அம்பத்தூர் கல்வி மாவட்டம் செங்குன்றம் கேபிசி அரசு மகளிர் மேல்நிலைறப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ம. பிரேம்குமாரி தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி எல்.சரவணன், பள்ளி வளர்ச்சி குழு எம். சேரன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.

இந்தநிகழ்ச்சியில் மாணவர்களின் கவிதை, பேச்சு போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் காமராஜர் குறித்து பியா என்ற மாணவி பேசினார். காமராஜர் வேட மணிந்த வந்த மாணவி அவரது திட்டங்கள் குறித்து நாடகமாக நடித்து காட்டினார்.

விழாவை முதுகலை தமிழாசிரியர் அமுதவல்லி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சுவவமி நாதன் ஒருங்கிணைத்தார்.