திருச்சி, ஜூலை 18: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் நாள் விழா, மஜ்லிசுல் உலமா நூற்றாண்டு விழா, இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவ எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி. எம்.ஜே. ஜமால் முஹம்மது, உதவிச்செயலாளர் முனைவர் கே. அப்துஸ் சமது ஆகியோர் முன்னிலை வகித்தினர்.கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் திருச்சி அஹமத் பிரதர்ஸ் பங்குதாரர் ஹாஜி. ஏ.கே. உசேன் சாஹிப் முன்னிலையில், கல்லூரியின் மேனாள் மாணவரும், சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளருமான ஆயிஷா நடராசன் சிறப்புரையாற்றினார்.

கல்லூரியின் தாளாளர் டாக்டர் ஏ.கே. காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி. எம்.ஜே. ஜமால் முஹம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மஜ்லிசுல் உலமா நூற்றாண்டு விழாவில் கவியரங்கம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மைய நூல் வெளியீட்டு விழாவில் கல்லூரியின் மேனாள் மாணவரும், ஏபிசி மருத்துவமனையின் மருத்துவ நிபுணருமான டாக்டர் எம்.ஏ. அலீம் முன்னிலையில், நூலாசிரியர் ஜெ.ராஜா முகமது மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் என். ராஜேந்திரன் நூலை வெளியிட, என்.எம். கமால் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கே. பஷீர் அஹமது முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

முப்பெரும் விழாவின் நிறைவு விழாவில், துபாயை சேர்ந்த அறிவியல் அறிஞரும்-பொறியியல் வல்லுநருமான முனைவர் எம்.ஜே. முகமது இக்பால், பேரவை நிறுவனர் பேரா. சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.