நிலவில் தங்கி சோதனை: நாசா அறிவிப்பு

உலகம்

வாஷிங்டன், ஜூலை 19: நிலவில் ஏற்கனவே மனிதன் இறங்கி சோதனை நடத்திய நிலையில், தற்போது அங்கு மனிதன் தங்கியிருந்து ஆய்வு நடத்தப் போவதாக நாசா அறிவித்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், வானியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியாளர்களை நிலவுக்கு அனுப்பி, அதன் நிலப்பரப்பை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அங்கு கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை செய்ய முடியுமா என்பது பற்றி ஆய்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இது உதவும் என்று நாசா தெரிவித்துள்ளது.