சாலை விபத்தில் குழந்தை நட்சத்திரம் பலி

இந்தியா

ராய்ப்பூர், ஜூலை 19: தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காரில் சென்ற இந்தி தொலைக்காட்சித் தொடர் குழந்தை நட்சத்திரம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஞ்கீர் சம்பா எனும் பகுதியைச் சேர்ந்தவர் சிவலேக் சிங் (வயது 14). இவர் இந்தி சின்னத்திரை தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இவர் நடித்த இந்தி நாடகங்களாக ‘சசுரல் சிமர் கா’, ‘ஹனுமான்’ போன்ற சீரியல்களால் புகழ்ப்பெற்றார்.

சிவலேக், தனது பெற்ரோருடன் தற்போது மும்பையில் தங்கியுள்ளார். இவர் தனது பெற்றோருடன் பிலாஸ்பூர் பகுதியில் இருந்து ராய்ப்பூருக்கு பிரபல டீவி ஒன்றில் இண்டர்வியூ கொடுப்பதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிரக்கில் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவலேக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.