காஞ்சிபுரம், ஜூலை 19: 19-ம் நாளான இன்று ஆதி அத்தி வரதருக்கு நீல நிற பட்டாடை அணிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் கிளியை கையில் வைத்தபடி அலங்காரம் செய்யப்பட்டு பெருமாளுக்கு பிடித்த வெட்டி வேரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலை மற்றும் செண்பகம், தாமரை, வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சில அசம்பாவித சம்பவங்களை நடைபெற்றதை யொட்டி இன்று கூடுதல் ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. காஞ்சியில் 19-ம் நாளான இன்றுகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் இசைக்க நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.  இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர்.

ஆதி அத்திவரதருக்கு நீல நிற பட்டாடை அணிவிக்கப் பட்டுள்ளதுடன், ஆண்டாள் கிளி வைத்த அலங்காரத்தில் உடல் முழுவதும் பெருமாளுக்கு பிடித்த வெட்டி வேரால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலை மற்றும் செண்பகம், தாமரை, வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கலந்து பூக்களால் மாலைகளும் அத்திவரதரின் கழுத்தை அலங்கரிக்கின்றன.

19-ம் நாள் வைபவத்தில் நீல நிறப் பட்டாடை அணிந்து ஆண்டாள் கிளியைக் கையில் ஏந்தி காட்சி தரும் அத்தி வரதரை வரிசையில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று திருவோண நட்சத்திரம் என்பதால் கூட்டம் அதிகாலை முதலிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலையிலேயே கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வந்ததால் காவல் துறையினரின் கட்டுப் பாட்டையும் மீறி சில அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதையெடுத்து பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீர், கழிப்பிட வசதிகள், மருத்துவ வசதிகளை கூடுதலாக அமைத்துள்ளனர். நேற்று மட்டும் 3 லட்சம் பக்தர்கள் ஆதி அத்தி வரதரை தரிசித்தனர். மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித் துள்ளதால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை நிறுத்தி வைத்து முன்னால் சென்றவர்கள் தரிசனம் செய்து விட்டு திரும்பும் வரை, 15 நிமிடம் கழித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பக்தர்களை அனுப்பி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாகவும் நிதனமாகவும் சாமியை பார்த்து வருகின்றனர்.