சென்னை, ஜூலை 19:  சென்னையில் கடந்த இரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.3,369க்கும், ஒரு சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.26,952-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,526க்கும், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.22,208க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.44.50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு தங்கம் ரூ.27 ஆயிரத்தை தொடுவதற்கு இன்னும் 8 ரூபாய் தான் குறைவாக உள்ளது. அதிகரித்து வரும் விலையால் ஆபரணப் பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.