காப்பான் ஆடியோ  வெளியீடு: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்

சினிமா

பெரும் பொருட்செலவில் கேவி ஆனந்த இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா, மோகன்லால் இணைந்து நடிக்கும் காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் பிரமாண்ட முறையில் நடைபெறுகிறது.

சூர்யாவும், மோகன்லாலும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். மோகன்லால் பிரதமர் வேடத்திலும், சூர்யா பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு படை தலைவராகவும் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். மோகன்லாலின் மகனாக ஆரியா நடிக்க இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி இப்படம் திரைக்கு வெளிவர இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் பிரமாண்டாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.