தலைக்கவசம் அணிவது பற்றி விழிப்புணர்வு பேரணி

சென்னை

அம்பத்தூர், ஜூலை 19: அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள விளையாட்டு திடலில் அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடை பெற்றது.  அம்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல் தலைமை தாங்கி இருசக்கரவாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர்.

இந்த பேரணியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இருசக்கரவாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி அம்பத்தூர் வட்டாசியர் அலுவலகம் முதல் அம்பத்தூர் பேருந்து நிலையம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் 20 க்கும் மேற்பட்ட இருசக்கரவாகன ஓட்டுநர்களுக்கு அம்பத்தூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தலைக்கவசம் வழங்கப்பட்டது. இதில் அம்பத்தூர் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி, காவல் துறை இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் உட்பட ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.