விடுமுறை நாளில் வருவதை முதியோர் தவிர்க்க வேண்டும்

தமிழ்நாடு

காஞ்சிபுரம், ஜூலை 19: அத்தி வரதரை உற்சவத்தின் 19 வது நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் சில அசம் பாவித சம்வங்கள் நடைபெற்றன. இதை யொட்டி இன்று முதல் கூடுதலாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது . மேலும் விடுமுறை நாட்களில் முதியோர்,கர்ப்பிணிகள் அத்தி வரதரை தரிசிப்பதை தவிர்க்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- அத்திவரதர் விழாவுக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகி வருவதால் அனைவரும் அத்திவரதரை தரிசிக்கும் வகையில் மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்க விழா முடியும் வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அத்தி வரதரை வணங்கிய பின்னர் அனைவரும் நேரடியாக மேற்கு கோபுரம் வழியாக வளாகத்தில் இருந்து வெளியே அனுப்பப் படுவார்கள். முக்கியஸ்தர்கள் தரிசனம் தினமும் மாலை ஆறு மணிவரை மட்டுமே நடைபெறும். தினமும் ஒரு லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்த்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

நாள்கள் செல்லச் செல்ல கூடுதலாக பக்தர்கள் வருகை புரிந்தனர். இதற்கென கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது தினமும் 2 லட்சம் பக்தர்கள் வரை வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு கிழக்கு கோபுர நுழைவு பகுதியிலும் இதர பகுதிகளிலும் சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் செல்லும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பணி குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மாற்றுத்திறனாளி களுக்கு தனிவழி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் விரைந்து மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

வாரம் விடுமுறை நாட்களில் அதிகமான கூட்டம் வருவதால் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள், முதியோர் மாற்றுத்திறனாளிகள், இருதய நோயாளிகள் தரிசனத்துக்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆங்காங்கே தலைசுற்றல் மயக்கம் இருப்பவர்களுக்கு முதன்முறையாக உப்பு சக்கரை கரைசல் தண்ணி 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கில் வைக்கப்பட்டுள்ளது.

கூட்டநெரிசலில் அசௌகரியங்கள் ஏதேனும் ஏற்பட்டால் தொடர்ந்து வரிசையில் செல்ல வேண்டாம். அருகில் இருக்கும் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுக் கொள்ள செல்லலாம்.  இன்று முதல் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.