கியூபாவை அடுத்தபடியாக தமிழகம்: விஜயபாஸ்கர்

சென்னை

சென்னை, ஜூலை 19: கியூபாவை அடுத்து உலகில் தமிழகத்தில் தான் தாய்க்கு எச்ஐவி நோய் இருந்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு தோய் தொற்று ஏற்படாத நிலையை உருவாக்கி உள்ளோம் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் பேசுகையில்: எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் குடும்பத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

அமைச்சர் சரோஜா: சமூக நல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 21 தத்துவல மையங்களில் இந்த குழந்தைகள் அரசு தத்தெடுத்து வருகிறது. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்படாத குழந்தைகளை பெற்றோர்கள் தத்தெடுக்க விரும்பினால் விதிக்களுக்குட்பட்டு அந்த பணியும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு உதவியுடன் தொண்டு நிறுவனம் திருவள்ளூரில் மையம் அமைக்கப்பட்டு, 71 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: உறுப்பினர் குறிப்பிட்டுள்ள போது எச்ஐவியால் தாய் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகளுக்கு நோய் தொற்று பாதிக்காத நிலையை உலகிலேயே கியூபாவுக்கு அடுத்த தமிழகத்தில் தான் அரசு ஏற்படுத்தி உள்ளது.