தாம்பரம், ஜூலை 19: தாம்பரம் அடுத்த அகரம் மெயின் சாலை, பாரத் நகர், அம்மன் குடியிருப்பைச்சேர்ந்த விக்டர் தேவசகாயம் என்பவருக்கு திருவாரூரைச்சேர்ந்த கணேசன் (வயது 27) என்பவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு டிரைவராக பணியில் சேர்ந்தார்.

கணேசனுக்கு அதே ஊரைச்சேர்ந்த பிரியா என்ற பெண்ணை பெற்றோர்கள் நிச்சயம்செய்துள்ளனர்.கடந்த 2 நாட்களாக பிரியா பேசவில்லை என்பதால் மனமுடைந்த கார் டிரைவர் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.