சென்னை, ஜூலை 19: பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், பாடி மற்றும் தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையை தலைமை இடமாகக் கொண்டு சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு தி.நகர், பாடி உள்பட 5 இடங்களில் கிளைகள் உள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் கடைகளில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில், பாடி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை செய்து வருகின்றனர். கடையின் விற்பனை மற்றும் கணக்கு, வழக்குகளை சரிபார்த்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.