சென்னை, ஜூலை 19: திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேற்கு பகுதியை தென்காசியை தலைமையிடமாக வைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.

அந்த பகுதி மக்களின் பணிச்சுமையும், போக்குவரத்து வசதியையும் அறிந்து தென்காசி மாவட்டத்தை தனி மாவட்டமாக அறிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர். உதயகுமார் ஆகியோருக்கு பசும்பொன் மக்கள் கழகம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக தன் நிறுவனத்தலைவர் இசக்கி முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.