தயாநிதிமாறனுக்கு கருத்து கூற விரும்பவில்லை

சென்னை

சென்னை, ஜூலை, 19: சேலம் எட்டு வழிச்சாலை கொண்டு வந்தால் சென்னையில் இருந்து சேலத்திற்கு 2 மணி நேரத்தில் செல்லலாம் என்று நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் பேசியதற்கு கருத்து கூற விரும்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே,எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே,எஸ். அழகிரி இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிருபர் களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- டெல்லியில் ராகுல் காந்தி தலைமை யில் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் அந்த கூட்டத் தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன்.

கர்நாடக மாநிலத்தில் பிஜேபி காலூன்ற நினைக்கிறது. அரசியலில் ஜனநாயக படுகொலையை பிஜேபி அரங்கேற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
குமாரசாமி தலைமையில் நடைபெறும் ஆட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. ஆனால் பிஜேபி எம்எல்ஏக்களை கடத்தி நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைத்தும், பணத்தாசை காட்டியும் சூழ்ச்சி வலையில் கர்நாடக அரசை சிக்கவைத்துள்ளது. இதை தமிழக காங்கிரஸ் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் அவர் கூறுகையில், சேலம் 8 வழிச்சாலை கொண்டு வந்தால் இரண்டு மணி நேரத்தில் சென்னையிலிருந்து சேலம் செல்லலாம் என்று நாடாளு மன்றத்தில் தயாநிதிமாறன் பேசியது குறித்து நான் கருத்துக்கூற விரும்ப வில்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சேலம் எட்டு வழிசாலையை கொண்டு வருவது குறித்து பொதுமக்களின் கருத்தை தெரிவித்தோம். தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கூறியது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.