விழுப்புரம், ஜூலை 19: திருவெண்ணெய்யதுல்லூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் சேகர் மகன் சந்துரு (வயது 20). பட்டதாரியான இவர், விழுப்புரம் ஆஷாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து அவரது கையில் பிளேடால் கிழித்ததோடு, அவருடைய 2-வது மகளின் தலையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் சந்துருவை கைது செய்தனர்.