திருச்சி, ஜூலை.19: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறையில் முதுகலை பாலினவியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இதுகுறித்து பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பில் எம்ஏ பாலினவியல் (2 ஆண்டுகள்), எம். ஏ மகளிரியல் (வார இறுதி வகுப்பு படிப்பு – 2 ஆண்டுகள்), பி.ஹெச்.டி மகளிரியல் (பொது நுழைவுத் தேர்வு), வாழ்க்கை திறன் கல்வி மற்றும் ஆலோசனை ஆகிய பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

முதுகலை படிப்பிற்கு கலை, அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, வணிகம், பொருளியல், சட்டம் போன்ற ஏதாவது ஒரு படிப்பில் பட்டம் பெற்றவர்கள் சேரலாம். முனைவர் பட்ட ஆய்விற்கு முதுகலையில் 55 விழுக்காடு மதிப்பெண் மற்றும் பொதுத் நுழைவுத் தேர்வு முறையில் சேர்க்கை நடைபெறும்.விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 94439 23839, 94430 20683.