சென்னை, ஜூலை 19: சென்னை மயிலாப்பூரை சேர்ந்த மைதீன், மோகன் ஆகியோரது வீடுகளில் கடந்த மே மாதம் மொத்தம் 10 சவரன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது.  இது குறித்த புகாரின்பேரில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதனடிப்படையில், இவர்களின் வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளையனை, பல்லக்கு மாநகர் மதுபானக்கடை வாசலில் இருந்தபோது, போலீசார் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில், சேலையூரை சேர்ந்த ஆரிபிலிப்ஸ் என்பதும், இவர் மீது 30-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது. இவரிடம் இருந்து 8 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ஆரிபிலிப்ஸ் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், தனக்கு 2 மனைவிகள் இருப்பதாகவும், மதுகுடிக்க அல்லது போதை ஊசி போட கையில் பணம் இல்லாத நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என கையில் கிடைப்பதை எடுத்துச்சென்றுவிடுவேன். மற்ற நேரங்களில் கைவரிசை காட்டமாட்டேன் என்று தெரிவித்துள்ளான்.