சென்னை, ஜூலை 19: அறிஞர் அண்ணா அவதரித்த பூமியான காஞ்சிபுரத்தை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் சட்டசபையில் கே.பழனி (அ.தி.மு.க.) வலியுறுத்தி உள்ளார். தமிழக சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மான்ய விவாதத்தில் கலந்துகொண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உறுப்பினர் கே.பழனி பேசியதாவது :- அரசியல் பல அற்புதங்களை நிகழ்த்தியவர் வேதா நிலையத்து வீரத்தாய். அவருடைய வழியில் அண்ணன் எடப்பாடியார் சிறப்பான ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலில் அ.தி.மு.க. வெற்றி நடைபோட அணைத்து வகையிலும் தயாராகிவிட்டது.

வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும் என்பது உறுதி. அடுத்து வர இருக்கிற நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி சரித்திரம் படைக்கும். எதிரிகள் தோல்வி முகம் கண்டு ஓட்டம் பிடிப் பார்கள். தென்னாட்டு காந்தி, திராவிட இயக்கத்தின் முதலாவது முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவதரித்த பூமி காஞ்சிபுரம். இப்போது காஞ்சிபுரம் நகராட்சியாக உள்ளது. அதை விரைவில் தரம் உயர்த்தி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும்.

ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் நீண்ட நாட்களாக வசிக்கிற மக்கள் பட்ட கேட்கிறார்கள். அதிகாரிகள் அந்த இடத்தை பெல்ட் ஏரியா என்று சொல்லி பட்டா தர மறுக்கிறார்கள். தலைமுறை, தலைமுறையாக அங்கு வாழும் அந்த மக்களுக்கு குடியுரிமை பட்ட வழங்கிட வேண்டுகிறேன். ரியல் எஸ்டேட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அதை நம்பி வாழ்கிற தரகர்கள் கஷ்டப்படுகிறார்கள். அவரகள் வாழ்வாதாரத்தை உயர்த்திட முதல்வரை கேட்டுக்கொள்குன்றத்தூரில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைத்து தரவேண்டும். குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கம் ஆகிய குறுவட்டங்களை ஒன்று சேர்த்து இதை நிறைவேற்றித்தரவேண்டும். ஸ்ரீபெரும்புதூரில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கட்டி சுற்றுச்சுவர் அமைத்து கொடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.