சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்சுடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘வானம் கொட்டட்டும்‘ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

இப்படத்தை தனா இயக்குகிறார். மேலும், தனாவுடன் இணைந்து மணிரத்னம் கதை எழுதியுள்ளார். பல வெற்றி பாடல்களைப் பாடி அதன்மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்திய பிரபல பாடகர் சித் ஸ்ரீராம், இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை விவேக் எழுதுகிறார்.

இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆடை வடிவமைப்பை ஏகா லக்கானி கையாள ப்ரீதா கேமராவை இயக்குகிறார். கதிர் கலை இயக்குநராக பணியாற்ற, சங்கதமிழன் படத்தொகுப்பைக் கவனித்துக்கொள்கிறார்.‘வானம் கொட்டட்டும்‘ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. படத்தை 2020-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.