சிக்னல் கோளாறு: மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு

சென்னை

சென்னை, ஜூலை 21: சென்னை மெட்ரோ ரயில் சேவை சிக்னல் கோளாறு காரணமாக அங்காங்கே நிறுத்தப்பட்டத்தால் பயணிகள் கடும் அவதிகுள்ளாகினர். சென்னை மெட்ரோ ரயில் சேவை 2 வழிதடங்களாக இயக்கப்பட்டு வருகிறது.

இன்று விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தைவிட மெட்ரோ ரயிலில் பயணம் செய்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்ட நிலையில், சிக்னல் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டு, அங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.