திருச்சி, ஜூலை 21: சமயபுரம் டேல்கேட் பகுதியில் அலுவலகம் அமைக்கப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு அவற்றை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் கூறினார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.பி., அலுவலகத்தில் மக்களின் குறைகள் தொடர்ந்து கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

“புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்றதாக இல்லை. அதனை மக்கள் விரும்பவும் இல்லை” என்று, எம்பி பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “இந்தி மொழித் திணிப்பு என்பது மாநில கொள்கைகளுக்கு எதிரானது. புதிய கல்விக் கொள்கை தமிழக மக்களுக்கு ஏற்றதாக இல்லை.

அதனை மக்கள் விரும்பவில்லை. பெரம்பலூர் தொகுதியில் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகள் நிறைந்த தொகுதி என்பதால் விளைப்பொருட்களை பாதுகாத்து வைக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.பி., அலுவலகத்தில் மக்களின் குறைகள் தொடர்ந்து கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.