கன்னியாகுமரி, ஜூலை 21: கன்னியாகுமரி கடற்பகுதியில் கடல்சீற்றத்தால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, வள்ளவிளை பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடல் சீற்றத்தின் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலுக்குல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பத்திரமாக கரைதிரும்புமாறு மாவட்ட கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.