மும்பை, ஜூலை 22: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் தோனி¢, ஹர்திக் பாண்டியா இடம்பெறவில்லை. ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடப்போகும் இந்திய அணியின் விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையிலான போட்டிகளுக்கும் விராத் கோலி தலைமை ஏற்கிறார்.

மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், க்ருணல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர்.

இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரஹானே, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோகித் சர்மா, ரிஷாப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் உள்ளனர்.