பாலிவுட்டிற்கு செல்லும் கீர்த்தி சுரேஷ்

சினிமா

விஜய், சூர்யா, விஷால் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாகி முன்னணி நடிகையான கீர்த்தி சுரேசுக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டிவந்தாலும் எந்த படமும் ஒப்புக்கொள்ளாமல் காலம் தாழ்த்துகிறார். அதற்கு காரணம் இந்தி மோகம்தான் என பேச்சு எழுந்துள்ளது. அதற்கேற்ப பாலிவுட் ஹீரோயின்கள்போல் ஒல்லியான தோற்றத்துக்கு மாறி புதிய இந்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஸ்ரீதேவி மகளும் நடிகையுமான ஜான்வி கபூருக்கு நெருங்கிய தோழி ஆகியிருக்கிறார் கீர்த்தி. காரணம் கீர்த்தி நடிக்கும் இந்தி படத்தை தயாரிப்பது ஜான்வியின் தந்தை போனிகபூர் தான்.

இந்நிலையில், இந்த படத்திற்காக தெலுங்கு முன்னணி நடிகர் நாகசைதன்யா படத்திலிருந்து விலகி அதிர்ச்சி தந்திருக்கிறார். முக்கியத்துவம் இல்லாதவை என்பதால் நடிக்க மறுத்து விட்டாராம். தமிழிலும் தற்போது கீர்த்தி சுரேசுக்கு ஒரு படம் கூட கைவசம் இல்லை.