காஞ்சிபுரம், ஜூலை 22: 22 நாளான இன்று ஆதி அத்திவரதருக்கு வெந்தய கலர் பட்டாடை அணிவிக்கப்பட்டு, பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலை மற்றும் செண்பகம், முல்லை, மல்லி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். 22ம் நாளான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் நிகழ்ச்சியோடு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர்.

ஆதி அத்திவரதருக்கு வெந்தய கலர் பட்டாடை அணிவிக்கப் பட்டு, பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலை மற்றும் செண்பகம்,முல்லை, மல்லிகை மாலைகள் அத்திவரதரின் கழுத்தை அலங்கரிக்கின்றன. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீண்ட தூரம் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் களைப் படையாமல் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில்,வரிசையில் வரும் பக்தர்கள் இருப்பிடத்திற்கு சென்று குடிநீர், தயிர் மற்றும் பிரசாதம் வழங்கி வருகின்றனர்.

மேலும் முதியோர் மற்றும் குழந்தைகள் . கர்ப்பிணிகள் நலனை கருதி ஓய்வறைகள் அமைத்துள்ளதுடன், கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்களும் கூடுதலாக அமர்த்தப்பட்டுள்ளனர். அத்திவரதரை தரிசிக்க கோவை, ஈரோடு போன்ற வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலை 3 மணியிலிருந்து வரிசையில் நின்று நிதானமாக அத்திவரதை தரிசனம்செய்து விட்டு செல்கின்றனர். 22ம் நாளான வைபவமான இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.