ஹரித்துவார், ஜூலை 23: கரைபுரண்டு ஓடிய கங்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை உயிரை துச்சமாக மதித்து காப்பாற்றிய போலீஸ்காரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து வெளுத்து வாங்கும் கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் விஷால் என்ற இளைஞர் நீராடிய போது கால் தடுக்கி ஆற்றில் விழுந்தார். பாய்ந்து செல்லும் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து மக்கள் கூச்சலிட்டனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சன்னி என்ற போலீஸ்காரர், நீரில் பாய்ந்து அதிவேகமாக நீந்தி சென்று விஷாலை காப்பாற்றினார்.

இந்த வீடியோ வைரலாகி அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.