கொல்லம், ஜூலை 23: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தனியார் மருத்துவ மனையை விலைக்கு வாங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெயலால், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவ மனையை ரூ.5.25 கோடிக்கு விலை பேசி, முதல் கட்டமாக ரூ.1 கோடி முன்பணத்தை ஜெயலால் வழங்கியிருக்கிறார்.

இதுபற்றி கட்சி மேலிடத்திடம் ஜெயலால் தகவல் தெரிவிக்காததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் பணம் தொடர்பான காரியங்களில் முன் அனுமதி பெறாமல் ஈடுபடக்கூடாது என்பது விதிமுறையாகும்.