காஞ்சிபுரம், ஜூலை 23: 23-வது நாளான இன்று ஆதி அத்திவரதருக்கு இளம் பச்சை வண்ணத்தில், ஒரு பக்கத்தில் மெரூன் கலரும், மறுபக்கத்தில் நீலக்கலர் பார்டர்கள் அமைந்த பட்டாடை அணிவிக்கப்பட்டு, செண்பகம், முல்லை, மனோரஞ்சிதம், ரோஜாக்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலைகளுடன் கிரீடத்தில் அரளி, துளசி, கனகாம்பரம், மல்லி கலந்த கதம்பம் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்து வருகிறார்.

23ம் நாளான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் நிகழ்ச்சியோடு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர்.

ஆதி அத்திவரதருக்கு இளம் பச்சை வண்ணத்தில், ஒரு பக்கத்தில் மெரூன் கலரும், மறுபக்கத்தில் நீலக்கலர் பார்டர்கள் அமைந்த பட்டாடை அணிவிக்கப்பட்டு, செண்பகம், முல்லை, மனோரஞ்சிதம், ரோஜாக்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு கிரீடத்தில் அரளி, துளசி, கனகாம்பரம் ,மல்லி கலந்த கதம்பம் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அத்திவரதரின் காலடியில் துளசி மாலைகள் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.