சென்னை, ஏப்.11:ஓசூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பிரச்சாரம் செய்ய முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கலவர வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்எல்ஏ பதவி பறிபோனது. அமைச்சர் பதவியிலிருந்தும் அவர் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதியில் வரும் 18-ந் தேதி மற்ற 17 தொகுதிகளுடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் அதிமுக சார்பில் பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி ஜோதி நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு பிரச்சாரம் செய்ய பாலகிருஷ்ணா ரெட்டிக்கு தடை விதிக்க வேண்டுமென்று அந்த தொகுதியின் அமமுக வேட்பாளர் புகழேந்தி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாலகிருஷ்ணா ரெட்டி பிரச்சாரம் செய்ய தடையில்லை என கூறியது.