திருநெல்வேலி, ஜூலை 23:  டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மதுரையை வீழ்த்தி, திண்டுக்கல் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

நடப்பு டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது.

இதனையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடாததால் ஆட்ட நேரமுடிவில் இலக்கை எட்டமுடியாமல் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 152 ரன்களே சேர்க்க முடிந்தது. இதன்மூலம், 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றது. இந்தியாவின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணிக்கு இது நடப்புத் தொடரில் 2-வது வெற்றியாகும்.