ஆரியாவின் ‘மகாமுனி’ செப்டம்பரில் ரிலீஸ்

சினிமா

மௌன குரு’ படத்துக்கு பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது மகாமுனி திரைப்படம். படத்தில் ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகாமுனி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகர் ஆர்யா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் மகாமுனி படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.