சென்னை மக்களோட வாழ்வியல், அந்த வாழ்வியலுக்குள்ள இருக்கிற நுட்பமான அரசியல், அந்த நுட்பமான அரசியலுக்குள்ள இருக்கிற ரவுடிசம் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களையும் முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘ஷார்ப்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜே.தமிழ்செல்வன் இயக்கியிருக்கிறார். நாயகனாக அதின் நடிக்கிறார்.

மேலும் சாய் தினா மற்றும் யோகி ராம் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் என்.எஸ்.கணேஷ், மணிமாறன், பிராணா, சதிஷ், கல்லா பிரதீப் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, டைசன் ராஜ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.