வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு

வேலூர், ஜூலை 24: வேலூரில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து கூட்டணி கட்சியினர் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். இதனால் வேலூரில் தேர்தல் திருவிழா சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.