சென்னை, ஜூலை 24: இந்தியாவிலேயே முதன்முதலாக மின்சாரத்தால் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள காரை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அந்த காரில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்து முதல் அனுபவத்தை பெற்றனர்.

தொழில்துறை சார்பில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் ஹுண்டாய்மோட்டார் இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் தனது நான்காவது விரிவாக்கத் திட்டத்திற்காக 7000கோடி ரூபாய்முதலீட்டில் 500 நபர்களுக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கூடுதலாக ஒருலட்சம் கார்கள் உற்பத்திசெய்யவும், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காதமின்சாரத்தில்இயங்கும் வாகனங்களைஉற்பத்திசெய்யவும் 24.1.2019 அன்று முதலமைச்சர் .எடப்பாடிகே. பழனிசாமி முன்னிலையில் ஹுண்டாய்மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடுஅரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் சொகுசு காரை முதலமைச்சர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, அவ்வாகனத்தில்பயணம் செய்தார். இந்த கார் உயர் தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 57 நிமிடங்களில் 80 விழுக்காடு மின்னேற்றம் செய்யும் வசதி கொண்ட மின்கலன் பொருத்தப்பட்டு, ஒருமுறைமுழுமையாகமின்னேற்றம் செய்வதன் மூலம் 452 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்ச்சியில், துணை முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறைஅமைச்சர்எம்.சி. சம்பத், செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஹுண்டாய்மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர் மற்றும் தலைமைசெயல்அலுவலர் எஸ்.எஸ். கிம் மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.