சென்னை, ஜூலை 24: சென்னையில் கொலை, கொள்ளை உள் ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் எர்ணாவூரை சேர்ந்த கங்காதரன், திருவொற்றியூரை சேர்ந்த் மோகன்ராஜ், மாத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன், புளியந்தோப்பை சேர்ந்த சசிகுமார், திருவெற்றியூரை சேர்ந்த அருண்குமார் ஆகியோர் மீது கொலை வழக்குகள் உள்ளன.

மேலும் செங்குன்றத்தை சேர்ந்த முகமது ரபி, பாடியநல்லூரை சேர்ந்த தங்கமணி, கொடுங்கையூரை சேர்ந்த சரவணன், பெரும்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மீது திருட்டு, கொள்ளை போன்ற வழக்குகள் உள்ளன என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.