கொழும்பு, ஜூலை 25:  இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரா (வயது 37) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய குலசேகரா, 184 ஒருநாள் ஆட்டங்களில் 199 விக்கெட்டுகளும், 58 டி20 ஆட்டங்களில் 66 விக்கெட்டுகளும், 21 டெஸ்ட் ஆட்டங்களில் 48 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

சமிந்தா வாஸ், லசித் மலிங்கா ஆகியோர் வரிசையில் அதிகபட்ச விக்கெட்டுகள் வீழ்த்திய 3-ஆவது இலங்கை வீரர் என்ற பெருமைக்குரியவர் குலசேகரா. 2018 மார்ச் மாதத்துக்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காத நிலையில், தற்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.