திண்டுக்கல், ஜூலை 25:  காரைக்குடி அணிக்கெதிரான டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற காரைக்குடி அணி பவுலிங்கை தேர்வு செய்ய, காஞ்சி வீரன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய அந்த அணி வீரர் சஞ்சய் யாதவ் 60 பந்துகளில் 95 ரன்கள் குவித்து மிரளவைத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 177 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய காரைக்குடி அணி, 14.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் தரைவார்த்து கொடுத்து 67 ரன்களில் சுருண்டது. இதன்மூலம், 110 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.