பிரிட்டிஷ் புதிய உள்துறை மந்திரி மோடி ஆதரவாளர்

உலகம்

லண்டன், ஜூலை 25: இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோடி ஆதரவு பெண்மணிக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரக்ஸிட் ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து, தெரசா மே பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். புதிய பிரதமராக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் நேற்று பொறுப்பேற்றார்.

போரிஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரீத்தி பட்டேல் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரீத்தி பட்டேலுக்கு மிக முக்கியத்துறையான உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரீத்தி பட்டேல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் ஆவார். அவர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.