கொல்கத்தா, ஜூலை 25: மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணின் வயிற்றில் 1.5 கிலோ எடையுள்ள நகைகள் மற்றும் நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராம்பூரத் அருகில் உள்ள கிராமமொன்றில் வசித்து வந்த 26 வயது இளம்பெண் வயிற்று வலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் வயிற்றுக்குள் நகைகள், நாணயங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து 90 நாணயங்கள், தங்க நகைகளை வெளியே எடுத்தனர்.

வெளியே எடுக்கப்பட்ட பொருட்களின் மொத்த எடை 1.5 கிலோ ஆகும். யாருக்கும் தெரியாமல் பொருட்களை விழுங்கும் வழக்கத்தை அந்த பெண் கொண்டிருந்தார் என்பது தெரியவந்திருக்கிறது.