ராஞ்சி, ஜூலை 25: பீகார் மற்றும் ஜார்க்கண்டில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்து உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இடி, மின்னல் தாக்கி இரண்டு மாநிலங்களிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் இடி, மின்னலுக்கு 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஜார்க்கண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகும். தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.