கழுத்தில் கத்தியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த பெண்ணால் பரபரப்பு

சென்னை

சென்னை, ஜூலை 25: கண்ணகி நகர், எழில் நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராமு. இவரது, மனைவி மகா சண்டையிட்டு தாய் வீட்டில் வசித்துவந்துள்ளார். மேல் மாடியில் வசித்துவரும் லட்சுமி என்பவர் ராமுவுடன் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கே தெரியாமல் அதை வீடியோ எடுத்து, மகாவிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதனால், ராமுவிடம் மகா மீண்டும் சண்டையிடவே, ஆத்திரமடைந்த ராமு, இதற்கு காரணமான லட்சுமியை கத்தியால் சரமாரியாக தாக்க, கத்தி லட்சுமியின் கழுத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. ராமு தப்பியோடிவிட, லட்சுமி கழுத்தில் கத்தியுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.